பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Narendra Modi Delhi India
By Sumathi Sep 01, 2022 06:22 AM GMT
Report
165 Shares

பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஐ 

ஒவ்வொரு அரசு அலுவலகங்களின் செயல்பாடு, அரசு திட்டங்கள் தொடர்பான விபரங்களை பொதுமக்கள் ஆர்டிஐ எனும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதன்மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் உணவுக்கான செலவு, பிரதமர் மோடியின் பாதுகாப்பு செலவுகள்,

பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு.. வெளியான அதிர்ச்சி தகவல்! | Rti Question Regarding Pm Food Expense

வாகன செலவுகள், அவரது சம்பளம் உள்லிட்ட விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டுள்ளார். இதற்கு தற்போது பிரதமர் அலுவலக செயலாளர் பினோத் பிஹாரி சிங் பதில் அளித்துள்ளார்.

 தகவல் அறியும் உரிமை

அதில், பிரதமரின் உணவுக்காக அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை. பிரதமரின் இல்லம் இந்திய மத்திய பொதுப்பணித் துறையால் பாதுகாக்கப்படுகிறது. அதே சமயம் வாகனங்களின் பொறுப்பு எஸ்பிஜி பொறுப்பில் உள்ளது என்றும் கூறினார்.

பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு.. வெளியான அதிர்ச்சி தகவல்! | Rti Question Regarding Pm Food Expense

மேலும் , நாடாளுமன்றத்தில் இயங்கும் கேன்டீன் தொடர்பாக தற்போதைய அரசு பல சீர்திருத்தங்களை செய்துள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஜனவரி 19, 2021 அன்று நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தார்.

பிரதமர் மோடி

2021ஆம் ஆண்டுக்கு முன், பார்லிமென்ட் கேன்டீன்களில் ரூ.17 கோடி மானியமாக செலவிடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரதமர் நரேந்திர மோடியின் சம்பளம் தொடர்பான கேள்விக்கு அவரது சம்பளம் என்ன? என்பது பற்றிய இலக்கம் குறிப்பிடப்படவில்லை.

மாறாக பிரதமருக்கான சம்பளம் ஏற்கனவே உள்ள விதிகளின்படி வழங்கப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.