பிரதமர் மோடி திறந்து வைத்த சாலை ஒரே வாரத்தில் குழிகளாக மாறிய அவலம்..!

Narendra Modi Uttar Pradesh
By Thahir Jul 23, 2022 12:14 PM GMT
Report

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரதமர நரேந்திர மோடி திறந்து வைத்த புந்தேல்கண்ட் விரைவுச் சாலை குண்டும் குழியுமாக மாறியது.

பிரதமர் மோடி திறந்து வைத்த சாலை 

கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் விரைவு சாலைக்கு பிரதமர் நரேந்திர அடிக்கல் நாட்டினார்.

28 மாதங்களாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.இந்த விரைவுச் சாலையால் சித்ரகூட் பகுதியிலிருந்து டெல்லி செல்வதற்கான பயண நேரம் 3-4 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி திறந்து வைத்த சாலை ஒரே வாரத்தில் குழிகளாக மாறிய அவலம்..! | Pm Road Inaugurated Turned Into Potholes

இந்த சாலையால் அதிக பலன் ஏற்படும். விரைவுச்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்துடன் செல்ல வழிவகை உள்ளதோடு புந்தேல்கண்ட் முழுவதும் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்றார்.

அகிலேஷ் யாதவ் விமர்சனம் 

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புந்தல்கேட் சாலை ஒரே வாரத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், முடிவடையாத திட்டங்களை முடித்ததாகக் காட்டியுள்ளதற்கு இது ஒரு உதாரணம்.

புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை மிகப் பெரிய மனிதர்கள் தான் திறந்து வைத்தனர்.ஆனால் ஒரே ஒரு வாரத்தில் ஊழல் குழிகள் வெளியே வந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.