3 இடங்களில் மட்டும் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணி - பலத்த பாதுகாப்பு

Tamil nadu Cuddalore Kallakurichi
By Sumathi Nov 06, 2022 12:39 PM GMT
Report

44 இடங்களில் பேரணியை ஒத்திவைத்த நிலையில், 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ் பேரணி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் 44 இடங்களில்தான் பேரணியை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்தில் மட்டும் பேரணி நடத்த வேண்டும் என 11 நிபந்தனை விதிக்கப்பட்டது.

3 இடங்களில் மட்டும் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணி - பலத்த பாதுகாப்பு | Rss Was Held In Only 3 Places Rally

இந்நிலையில், இன்று நடைபெற இருந்த பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 3 மாவட்டங்களில் மட்டும் பேரணி நடத்தமுடிவு செய்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக 1000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அதன்படி, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெற்றது. மேலும், கள்ளக்குறிச்சியில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சார்பில் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டையும், 153வது காந்தி ஜெயந்தி விழா மற்றும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு அணிவகுப்பு நடந்தது.