தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

By Irumporai Sep 22, 2022 10:12 AM GMT
Report

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம்  அனுமதி | Rss In Tamil Nadu The High Court Allowed

அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனு மீது இன்று முடிவெடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.   

உயர்நீதிமன்றம் அனுமதி

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு செப்.28-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லுபுத்தூர் உளப்பட 9 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவர்களது உடை அணிந்து, ஊர்வலம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.