மோடி பிரதமராவதில் விருப்பமில்லாத RSS..பரிசீலனையில் வேறு பெயர்கள்!! அதிர்ச்சி தகவல்!!
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர் அதிகாரிகள் பிரதமர் பதவிக்கு வேறு பெயர்களை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக உறுதிப்படுத்தியது.
மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ் ஆர்வம் காட்டவில்லை என்றும், வேறு வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் பேசினார்.
2024 ஆண்டு தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு மோடி பதவி விலக வேண்டும் என்றும் ராவத் கூறினார். இதையும் மீறி மோடி ஆட்சி அமைக்க திட்டமிட்டால், அது நீண்ட காலம் நீடிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த முறை மோடியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். எதிராக உள்ளது என்றும், பிரதமர் பதவிக்காக பிற விருப்பங்களை அந்த அமைப்பு ஆராய்ந்து வருகிறதாக ராவுத் குற்றம் சாட்டினார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, RSS'இன் மூத்த நிர்வாகிகளில் ஒருவரை தொடர்பு கொண்டபோது, பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், ஆர்எஸ்எஸ் உயர் அதிகாரிகள் இந்த நேரத்தில் வேறு பெயர்களை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக உறுதி செய்தார்.
2014 லோக்சபாவில், மோடியின் தலைமையில், பா.ஜ., தனிப்பெரும்பான்மை (282 இடங்கள்) பெற்ற நிலையில், 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனித்து 303 லோக்சபா இடங்களைப் பெற்றது.
ஆனால், 2024 லோக்சபா தேர்தலில், எண்ணிக்கை 240 ஆக குறைந்தது. எனவே, மோடியின் புகழ் குறைந்து வருவதையும், அவரை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதையும் இது காட்டுகிறது" என்று தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.