சிலர் கடவுளாக பார்க்கிறார்கள் - மோடியை தாக்கி பேசிய ஆர்.எஸ்.எஸ்.தலைவர்?
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மோடியை எதிர்த்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன.
ஆர்.எஸ்.எஸ் - பாஜக
மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், RSS - பாஜக இடையே சற்று விரிசல் இருக்கும் வகையில் கருத்துக்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த கடுமையான விமர்சித்து, RSS மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் ஆளும் பாஜகவை "திமிர்த்தனம்" என்றும், எதிர்க்கட்சியான இந்திய கூட்டமைப்பு "ராமருக்கு எதிரானவர்கள்" என்றும் கடுமையாக சாடி பேட்டியளித்திருக்கிறார்.
இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மோடி எதிரான மனநிலையில் இருப்பதால் தான் வெளிப்படுகிறது என்ற கருத்து வெளியாகின்றன. தற்போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மோடிக்கு எதிராக இருப்பதாக சித்தரிக்கப்படுகிறது.
கடவுளாக
ஆனால், அவர் நேரடியாக பிரதமரை குறிப்பிடவில்லை. அவர் என்ன கூறினார் என்பதை முதலில் பார்க்கலாம். "முன்னேற்றத்திற்கு முடிவே இல்லை... மனிதர்கள் சூப்பர்மேன் ஆக விரும்புகிறார்கள், ஆனால் அங்கு நிற்கவில்லை, பிறகு அவர் 'பகவான்' ஆக விரும்புகிறார், பிறகு விஸ்வரூபம் எடுக்க விரும்புகிறார்கள்.
ஆனால், விஸ்வரூபத்தை விடவும் கடவுள் பெரிதாக மாறுவார் என்பது யாருக்கும் தெரியாது. வேலை செய்ய வேண்டும் என்று மோகன் பகவத் ஜார்கண்ட் மாநிலம் பிஷ்ணுபூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
சரி இது எவ்வாறு அவர் மோடியை மறைமுகமாக சாடுகிறார் என்று எழுதுகிறார்கள் என்றால், மோடி தான் biological'ஆக பிறந்திருக்க வாய்ப்பில்லை என கூறியதை வைத்தே.