தோனின்னாலே எளிமைதானோ ? 40 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை , வைரலாகும் புகைப்படம்

MS Dhoni Indian Cricket Team
By Irumporai Jul 02, 2022 09:29 AM GMT
Report

பிரபலங்கள் என்றால் பெரிய மருத்துவமனைகளுக்குச் சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெறுவதே வாடிக்கை. ஆனால், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளூர் ஆயுர்வேத மருத்துவரிடம் ரூ.40 மட்டுமே செலவு செய்து தனக்கு சிகிச்சை செய்து கொள்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

40 ரூபாய் டாக்டரிடம் சிகிச்சை

தோனிக்கு கால்சியம் குறைபாடு காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஆயுர்வேத மருத்துவ முறையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுவருகிறது.

தோனின்னாலே எளிமைதானோ ? 40 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை , வைரலாகும் புகைப்படம் | Rs40 Treatment For Ms Dhonis Knee Problem

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வசித்து வரும் தோனி, அங்கிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியான லாபுங் என்ற கிராமப் பகுதியில் வசிக்கும் வந்தன் சிங் கேர்வார் என்ற ஆயுர்வேத மருத்துவரிடம் தனது மூட்டு வலிக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

வைரலாகும் புகைப்படம்

தோனியின் பெற்றோரும் இந்த ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்று நல்ல பலனை கண்டுள்ளனர். அதன் அடிப்படையிலேயே கடந்த ஒரு மாதமாக இந்த மருத்துவரிடம் தோனி சிகிச்சை பெறுகிறார்.

அத்துடன் இந்த சிகிச்சைக்காக அந்த ஆயுர்வேத மருத்துவரிடம் தோனி செலுத்திய கட்டணம் ரூ.40 மட்டுமே. பெரும்பாலும் காருக்குள் அமர்ந்தே ஆலோசனை பெற்று மருந்துகளை வாங்கிக்கொள்ளும் தோனி, அருகே வந்த பார்க்கும் சில ரசிகர்களிடம் மட்டும் செல்பி எடுத்துக்கொள்கிறாராம்.

தோனின்னாலே எளிமைதானோ ? 40 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை , வைரலாகும் புகைப்படம் | Rs40 Treatment For Ms Dhonis Knee Problem

கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள தோனி 40 ரூபாய் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது இணையத்தில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

டி20 ஆட்டத்தில் அடித்து விளையாடவே பார்ப்பார்கள்... தோனி அறிவுரை!