மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - இன்று முதல் பதிவு!

M K Stalin Tamil nadu
By Sumathi Jun 25, 2022 03:23 AM GMT
Report

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க பெயரை பதிவு செய்யும் சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்குகிறது.

 மாதம் ரூ.1000 

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரியில் சேர மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - இன்று முதல் பதிவு! | Rs1000 Month For Students Special Camp From Today

அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து கலை , அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் சேரும் மாணவிகளுக்காக திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்

இந்நிலையில் இன்று முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம் தகுதியான மாணவிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன.

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - இன்று முதல் பதிவு! | Rs1000 Month For Students Special Camp From Today

அத்துடன் https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அத்திட்டத்திற்கு தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களில் இணையத்தளத்தின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்காக மாணவிகளின் விவரங்கள் ,வங்கிக் கணக்கு விவரம், ஆதார் எண், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மருத்துமனையில் இருந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!