விரைவில் இபிஎஸ் திமுகவிற்கு வருவார்..அதிமுக எங்க பங்காளி - ஆர்.எஸ்.பாரதி

Tamil nadu DMK AIADMK Edappadi K. Palaniswami
By Sumathi Nov 10, 2022 06:13 AM GMT
Report

விரைவில் இபிஎஸ் திமுகவில் இணைந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி

திருப்பூரில், வடக்கும் மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துக் கொண்டார். அப்போது அவர், இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்ற பொய் பரப்புரையை பாஜக மேற்கொண்டு வருகிறது.

விரைவில் இபிஎஸ் திமுகவிற்கு வருவார்..அதிமுக எங்க பங்காளி - ஆர்.எஸ்.பாரதி | Rs Bharathi Speech At Tirupur Dmk Meeting

ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகின்றனர். மேலும் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய சுந்தர் பிச்சை திமுக ஆட்சி காலத்தில் கல்வி கற்று ஆங்கிலம் தெரிந்ததால் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.

பாஜக பகையாளி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பா.ஜ.க.வினரை போல பேசி வருகிறார். ஆளுநரை திரும்ப பெறக்கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கி இருக்கிறோம். குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.

அதிமுகவை குறைக்கூற போவதில்லை. ஏனென்றால் பெரும்பாலான அதிமுகவினர் திமுகவிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் எடப்பாடி பழனிசாமியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆனால் பதவி கொடுத்தவர்களையே காட்டிக்கொடுத்த அவரை திமுக சேர்த்து கொள்ளாது. அதிமுக எப்போது இருந்தாலும் திமுகவிற்கு பங்காளிதான், ஆனால் பாஜக, திமுகவிற்கு மட்டுமல்ல நம் இனத்திற்கே பகையாளி என கூறியுள்ளார்.