மூன்று கொலை செய்தவர் தான் எடப்பாடி : ஆவேசமான ஆர்.எஸ்.பாரதி

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jul 11, 2022 01:59 PM GMT
Report

திமுகவை பொறுத்தவரை நாங்கள் எந்த கட்சியையும் அழிக்க நினைத்தது கிடையாது என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதுதான் எடப்பாடிக்கு வழக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுகச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "எதற்கெடுத்தாலும் திமுகவை தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டதாக கூறினார்.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை பற்றியும், திமுகவை பற்றியும் குறை கூற வேண்டும் என எடப்பாடி நினைக்கிறார். திமுகவை பொறுத்தவரை நாங்கள் எந்த கட்சியையும் அழிக்க நினைத்தது கிடையாது. திமுகவை அழித்து விடுவேன் என ஜெயக்குமார் கூறுவது தவறு.

மூன்று கொலை செய்தவர் எடப்பாடி 

வன்முறை நடக்கும் போது சீல் வைப்பது அரசின் கடமை. உங்களுக்கு வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடுங்கள். நீதிமன்றம் அதிமுக அலுவலகத்தை திறக்கச் சொன்னால், நீதிமன்ற உத்தரவை மதிப்போம் என்று கூறினார். மூன்று கொலை செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.

மூன்று கொலை செய்தவர் தான் எடப்பாடி :  ஆவேசமான ஆர்.எஸ்.பாரதி | Rs Bharathi Speaking About Edappadipalanisamy

மீண்டும் அப்படி மாறுவிடுவேன் என கூறுகிறாரா..? எங்களை பொறுத்தவரை இப்போதும் அதிமுக எங்களுக்கு பங்காளி.. பாஜக பகையாளி என்பது தான் நிலைப்பாடு. ஓபிஎஸ் எங்களுக்கு ஏன் ஆதரவாக செயல்பட வேண்டும்.

கொடநாடு வழக்கு விரைந்து விசாரிக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் வழக்கு இன்னும் சில நாட்களில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வரும்" எனக் கூறினார்.    

திராவிடம் என்ற வார்த்தை இந்தியாவில் இல்லையா ? : கொந்தளித்த திமுக எம்.பி