Friday, Jul 25, 2025

விஜயகாந்த் துரோகியா..? ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு..! மன்னிப்பு கேட்கவேண்டும் - எழும் கோரிக்கைகள்..!

Vijayakanth M K Stalin DMK DMDK
By Karthick a year ago
Report

மறைந்த தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் குறித்து ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

 விஜயகாந்த் - ஆர்.எஸ். பாரதி கருத்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 2016-ஆம் ஆண்டின் தேர்தலில் முதலமைச்சராக வேண்டிய கருணாநிதிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்காமல் செய்தவர் துரோகி என்றும் எவ்வளவு பெரிய துரோகத்தை அவர் செய்தார் என பேசினார்.

rs-bharathi-about-vijayakanth-throgi-

2016-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்படும், அதனை ஏற்க மறுத்த தேமுதிக மக்கள் நல கூட்டணியை அமைத்தது.

பாஜக கூட்டணியில் தேமுதிக...?? அவசர அவசரமாக தேமுதிக வெளியிட்ட அறிக்கை!!

பாஜக கூட்டணியில் தேமுதிக...?? அவசர அவசரமாக தேமுதிக வெளியிட்ட அறிக்கை!!

இரு கூட்டணியும் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை மேற்கொள் காட்டியுள்ள தமிழக பாஜக, ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்திற்கு மாநிலத்தின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேமுதிக தொண்டர்களிடமும், தமிழக மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.