தீவிர சோதனையில் ரூ.4,658 கோடி பணம், பொருள் பறிமுதல் - தமிழகத்தில் மட்டுமே ரூ.460 கோடி!
நாடு முழுவதும் தீவிர சோதனையில் ரூ.4,658 கோடி பணம் பிடிப்பட்டுள்ளது.
தீவிர சோதனை
மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிக அளவிலான பணம், தங்கம் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ரூ.395.39 கோடி ரொக்கம், ரூ.489.31 கோடி மதுபானங்கள், ரூ.2,069 கோடி போதைப் பொருட்கள், ரூ.562.10 கோடி தங்கம் உள்ளிட்ட உலோகங்கள், ரூ.1,142.49 கோடி பரிசுப் பொருட்கள் என மொத்தம்ரூ.4,658 கோடி மதிப்பில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.4,658 கோடி பறிமுதல்
பறிமுதல் செய்ததில், 45 சதவீதம் போதை பொருட்கள். இவற்றின் மதிப்பு ரூ.2,069 கோடி. அதிக அளவில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வகையில், முதல் இடத்தில் ராஜஸ்தான் (ரூ.778.52 கோடி), 2-ம் இடத்தில் குஜராத் (ரூ.605.33 கோடி) ஆகிய மாநிலங்களை தொடர்ந்து,
தமிழகம் ரூ.460.84 கோடியுடன் 3-வது இடத்தில் உள்ளது.
ஜனவரி, பிப்ரவரியில் நாடு முழுவதும் பணம், மதுபானம், மருந்துகள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் இலவசங்கள் வடிவில் மொத்தம் ரூ.7,502 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஜனவரி முதல் இதுவரை ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.