எண்ணி முடிக்க மட்டுமே 13மணி நேரம்... ஐ.டி.ரெய்டில் சிக்கிய ரூ.390 கோடி!

Maharashtra
By Sumathi Aug 11, 2022 06:50 AM GMT
Report

தொழிலதிபர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் 390 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஐ.டி.ரெய்டு

மகாராஷ்டிராவில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலின்படி இந்த மாத தொடக்கம் முதல் 4 தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.

எண்ணி முடிக்க மட்டுமே 13மணி நேரம்... ஐ.டி.ரெய்டில் சிக்கிய ரூ.390 கோடி! | Rs 390 Crore Benami Properties Seized In Raid

இதற்காக நாசிக் நகரை சேர்ந்த ஐ.டி. அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கொண்ட 5 குழுவினர் சென்று சோதனை நடத்தினர். தொழிலதிபர்களின் இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

4 தொழிலதிபர்கள்

அவர்கள், ஸ்டீல், துணி வர்த்தகம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், பண்ணை வீட்டுக்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கப்-போர்டுகள், படுக்கை அறைகள் மற்றும் சில கோணி பைகளில் பணம் கற்றை கற்றையாக, பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதுதவிர, அவர்களின் நிலம், பங்களா உள்ளிட்டவற்றின் சட்ட ஆவணங்கள் மற்றும் வங்கி பரிமாற்ற ஆவணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. 8ம் தேதி வரை 6 பிரிவினராக பிரிந்து ஐ.டி. துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

 390 கோடி ரூபாய்

வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் 58 கோடி ரூபாய், 32 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் கணக்கில் வராத 390 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கணக்கிட 13 மணி நேரமானதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.