எடுக்க எடுக்க பணம்; காங்கிரஸ் எம்பி இடங்களில் சிக்கிய 300 கோடி ரொக்கம் - எகிறும் பாஜக!
காங்கிரஸ் எம்.பி தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டில் 300 கோடி சிக்கியுள்ளது.
தீரஜ் சாஹு
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர், தீரஜ் சாஹு வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அதிகாரிகள் குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ரொக்கப் பணம் கட்டுகட்டாக மீட்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.300 கோடி பணம் எண்ணப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கலாம்.
சிக்கிய 300 கோடி
ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு சுமார் மூன்று டஜன் பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயந்திரங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நோட்டு எண்ணும் பணி மெதுவாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த பணியில் வருமான வரித்துறையினர், மூன்று வங்கியின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில், "நீங்களும்(தீரஜ் சாஹு),
உங்கள் தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். இது புதிய இந்தியா. இங்கு ராஜ குடும்பம் என்ற பெயரில் மக்களை சுரண்ட முடியாது. சட்டம் தனது கடமையைச் செய்யும். ஊழலுக்கு காங்கிரஸ் உத்திரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு நரேந்திர மோடி உத்தரவாதம். மக்களின் பணம் திரும்பப்பெறப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.