உலக அதிசயத்தில் வேலை; 30 கோடி சம்பளம் - ஆனால் ஆள் கிடைக்கவில்லை
30 கோடி சம்பளம் அளிக்க முன்வந்தும் வேலைக்கு ஆள் கிடைக்காத நிலை உள்ளது.
30 கோடி சம்பளம்
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் லட்சக்கணக்கில் செல்வது செய்து இன்ஜினியரிங் எம்பிஏ படித்த பட்டதாரிகள் கூட ரூ.15,000 சம்பளத்திற்கு வேலைக்கு சேரும் நிலை உள்ளது.
இந்நிலையில் வருடம் 30 கோடி ரூபாய் சம்பளம் அளிக்க தயாராக இருந்தும், இந்த வேலையில் சேர யாரும் முன் வரவில்லை. அப்படி என்ன வேலை என பார்க்கலாம்.
கலங்கரை விளக்கம்
ஆண்டுக்கு 30 கோடி சம்பளம் இருந்தாலும் நாள் ஒன்றுக்கு சில நிமிடங்கள் மட்டுமே இந்த வேலை இருக்குமாம். ஆனால் இந்த வேலையைச் செய்பவர்கள் எப்போதும் தனியாக இருக்க வேண்டும்.
எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் உள்ள ஒரு கலங்கரை விளக்கத்தில் தான் இந்த வேலை உள்ளது. உலகின் முதல் கலங்கரை விளக்கம் இதுவாகும். இந்த கலங்கரை விளக்கம் பண்டைய கால 7 உலக அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்பட்டது.
லைட் கீப்பர்
இங்கு லைட் கீப்பர் வேலைக்குத்தான் இவ்வளவு சம்பளம். இந்த கலங்கரை விளக்கத்தில் உள்ள விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்த பணியில் சேருபவருக்கான ஒரே வேலை. மற்ற நேரங்களில் சாப்பிட்டு தூங்கி, கடல் அழகை ரசிக்கலாம்.
இந்த வேலை பார்ப்பவர் எப்போதும் தனியாக இருக்க வேண்டும்.மேலும் கடலின் நடுவே இருப்பதால் வலுவான புயலின் போது கடலில் மூழ்கும் அபாயமும் உண்டு. எனவே இந்த வேலைக்கு யாரும் முன் வருவதில்லை.
பண்டைய காலங்களில் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத போது கப்பல்கள் பாறையில் மோதும் அபாயம் உண்டு. அதற்காகவே கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட்டன. இதில் வரும் ஒளியானது பல மைல் தொலைவுக்கு பிரகாசமாக இருக்கும். இந்த ஒளி கடலில் திசையை அறியவும் பயன்பட்டது.