வேலையே செய்யாமல் 3 கோடி சம்பளம் - எந்த கம்பெனி தெரியுமா?
எந்த வேலையே செய்யாமல் ஆண்டுக்கு 3 கோடி சம்பளம் பெறுவதாக ஊழியர் பதிவிட்டுள்ளார்.
3 கோடி சம்பளம்
எவ்வளவு வேலை பார்த்தாலும் வேலைக்கேற்ற சம்பளம் இல்லை, ஊதிய உயர்வு இல்லை என பெரும்பாலான நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.
ஆனால் ஊழியர் ஒருவர் எந்த வேலையும் செய்யாமலே ஆண்டுக்கு 3.10 கோடி சம்பளம் பெறுவதாக Blind தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அமேசான்
இந்த பதிவில், கூகுள் நிறுவனம் ஆட்குறைப்பை மேற்கொண்டபோது என்னுடைய வேலை பறிபோனது. இதையடுத்து 1.5 ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்தில் முதுநிலை தொழில்நுட்ப திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய ஊதியம் ஆண்டுக்கு ரூ.3.10 கோடி. இந்த ஊதியத்துக்கான எந்த வேலையும் நான் அங்கு செய்வதில்லை.
மேலும், என்னுடைய வேலை நேரத்தில் பெரும் பகுதி அலுவலக மீட்டிங்களுக்கே கழிந்துவிடுகிறது. வெறும் 3 நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை செய்ய 3 மாதங்கள் எடுத்துள்ளேன். ஒட்டுமொத்தமாக எந்த வேலை செய்யாமல் சும்மா இருப்பதற்காக ஊதியம் பெறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
many such cases pic.twitter.com/4o32Qq7JKE
— anpaure (@anpaure) August 23, 2024
அவரின் பதிவில் வேலை பார்க்காமல் சும்மா இருப்பதால் அவருக்கான கற்றல் அனுபவம் கிடைக்காது என்றும் வருடம் முழுக்க உழைப்பவருக்கு இதில் ஒரு பங்கு கூட கிடைப்பதில்லை, சிலருக்கு அதிக வேலையும் சிலருக்கு குறைவான வேலையும் வழங்கப்படுவது கார்ப்பரேட் கட்டமைப்பில் உள்ள பிரச்னை என அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.