150 கிராம் தங்க நகைகள்....துல்கர் பட இயக்குனரிடம் பண மோசடி - அதிர்ச்சி பின்னணி

Dulquer Salmaan Desingh Periyasamy
By Karthick Apr 05, 2024 06:40 AM GMT
Report

 உடன் பணிபுரிந்த உதவி இயக்குனரே பணம் கையாடலில் ஈடுபட்டுள்ளார்.

தேசிங்கு பெரியசாமி

துல்கர் சல்மான், ரித்து வர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் " கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்". 2020-ஆம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி வெளியான இப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலையும் குவித்து வெற்றி படமாக அமைந்தது.

rs-3-lakh-fraud-to-director-desingh-dulqeer

இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. முதல் படத்திலேயே கவனமீர்த்த இவர், தற்போது ராஜ் கமல் தயாரிப்பில் நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் "STR 48" படத்தை இயக்கி வருகின்றார்.

கல்யாணமான புதுசுல அது நடக்கவே இல்லை - அவரு அப்போ ரொம்ப கோவப்படுவாரு - பாவனா ஓப்பன் டாக்

கல்யாணமான புதுசுல அது நடக்கவே இல்லை - அவரு அப்போ ரொம்ப கோவப்படுவாரு - பாவனா ஓப்பன் டாக்

தமிழ் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படத்தின் வேலைகளுக்கு நடுவில் தேசிங்கு பெரியசாமி சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை நேற்று அளித்துள்ளார்.

கையாடல்....

இவர் அளித்த புகாரில், தன்னிடம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் முகமது இக்பால் என்பவரே வீட்டின் கணக்கு வழக்குகளையும் பார்த்து வந்துள்ளார்.

rs-3-lakh-fraud-to-director-desingh-dulqeer

முகமது இக்பாலிடம் இரு நாட்களுக்கு முன்னர் சுமார் 150 கிராம் தங்க நகைகளை கொடுத்து தனியார் நிதி நிறுவனத்தின் அடகு வைத்து பணம் பெற்று வருமாறு அனுப்பிய நிலையில், அடகு வைத்ததில் கிடைத்த 3 லட்ச ரூபாய் பணத்தை முகமது இக்பால் கையாடல் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

rs-3-lakh-fraud-to-director-desingh-dulqeer

மேலும், பணம் குறித்து முகமது இக்பாலிடம் வினவிய போது, தனக்கும், தனது மனைவிக்கும் அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தேசிங்கு பெரியசாமி குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், அண்ணா நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.