பிளிப்கார்ட் டிரக்கிலிருந்து சாலையில் கொட்டிய ரூ.2000 நோட்டுகள் - திட்டமிடப்பட்ட நிகழ்வா?
பிளிப்கார்ட் டிரக்கிலிருந்து ரூ.2000 நோட்டுகள் சாலையில் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் கொட்டிய பணம்
மும்பையில் உள்ள கேட்வே சாலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாகனம் ஒன்று சாலையில் சென்றது.
அப்போது அந்த வாகனத்தின் பின்பக்க கதவுகள் திறந்து உள்ளிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் சாலையில் பறக்க விட்டபடி அந்த வாகனம் சென்றது. சாலையில் நடந்து சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஒட்டுமொத்த சாலையும் திருவிழா கூட்டம் போல காட்சியளித்தது.
எழும் கேள்விகள்
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனால், டிரக்கில் இவ்வளவு பணம் ஏற்றப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், இது ஒரு திட்டமிடப்பட்ட சம்பவம் என்றும் இந்த நிகழ்விற்கு பின்னால் வேறேதேனும் பின்னணி இருக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன. பிளிப்கார்ட்டின் 'பிக் பில்லியன் டேஸ்' என்ற சலுகை விற்பனை இன்று (அக்.8) தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
E-commerce wale toh bilkul pagal ho gaye hai boss! Pehle deals drop karte the, ab cash bhi drop kar rahe hai unka van! ??? Flipkart, kya next - discounts ke badle free holidays? #PaisoKiBaarish #WOW pic.twitter.com/DT4VFAhQnw
— Rajib (@Rajibsingha_) October 6, 2023