பொங்கலுக்கு ரூ.2000 பரிசுத்தொகை? வெளியான முக்கிய தகவல்!
பொங்கல் பரிசுத்தொகை ரூ.2000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகையையொட்டி இந்தாண்டு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக
அனைத்து மக்களுக்கும் நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழக அரசு சார்பாக நியாயவிலைக்கடைகளில் இந்தாண்டு பொங்கல் தொகுப்பாக இரண்டாயிரம் ரூபாய்,
பரிசுத்தொகை
கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அரசால் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையான ரூ.1000 உடன்,
பொங்கல் பரிசு தொகையான ரூ 1000 இணைந்து, ரூ 2000 மாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.