சிறுமி செல்லமாக வளர்த்த ஆடு; இறப்புக்கு ரூ.2 கோடி இழப்பீடு - என்ன நடந்தது?
ஆடு ஒன்றின் இறப்புக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆடு ஏலம்
கலிபோர்னியாவில், 11 வயது சிறுமி ஒருவருக்கு விவசாய மற்றும் சமூகப் பயிற்சிகளை வழங்கும் ஒரு திட்டத்தின் கீழ், ஆடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த ஆட்டை ஏலத்தில் விற்பனை செய்து, பரிசு வழங்கும் விதிமுறையும் இருந்துள்ளது. ஆனால், சிறுமி ஆட்டை செல்லமாக வளர்த்துள்ளார். எனவே, ஆட்டை ஏலத்திற்கு விட மனமில்லாமல், மனமுடைந்துள்ளார்.
ரூ.2 கோடி இழப்பீடு
ஏலத்திற்கு கொடுத்தபோது, சிறுமி மேஜையின் கீழ் படுத்து கதறி அழுதுள்ளார். பெற்றோர் ஆறுதல் கூறியும் சிறுமி அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. தொடர்ந்து, பெற்றோர், ஏலத்தில் கிடைத்த தொகையை திருப்பி கொடுத்து ஆட்டை மீண்டும் வாங்க முயன்ற போதும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக ஆட்டை திரும்ப வழங்க வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்துள்ளது. இதற்கிடையில், ஆடு பலியிடப்பட்டதை அறிந்து சிறுமி மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கில், சிறுமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டு, பலியான ஆட்டிற்காக ரூ.2 கோடி (3 லட்சம் அமெரிக்க டாலர்) இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.