ரூ.1 கோடிக்கு ஏலம் போன செம்மறி ஆடு, விற்க மறுத்த உரிமையாளர் - ஓஹோ இதுதான் காரணமா?

India Rajasthan
By Vinothini Jun 29, 2023 07:43 AM GMT
Report

ராஜஸ்தானில் ஒரு செம்மறி ஆடு ரூ.1 கோடிக்கு விலை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டின் சிறப்பு

ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூசிங். ஆடு மேய்ப்பவராக இருக்கும் இவர் செம்மறி ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆட்டின் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது.

sheep-goes-for-1-crore

இதுகுறித்து அவர், அந்த கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்தபோது செம்மறி ஆட்டின் உடலில் 786 என்ற எண்கள் காணப்பட்டது தெரிய வந்தது. இந்த எண்கள் இஸ்லாமிய மதத்தின் புனித எண்ணாக கருதப்படுகிறது. இதனை அறிந்த பின் இந்த ஆட்டை உரிமையாளர் விற்க மறுத்தார்.

ஏலம்

இந்நிலையில், அந்த ஆட்டின் உரிமையாளர் பேசுகையில், "செம்மறி ஆட்டின் உடலில் என்ன வாசகம் இடம்பெற்றிருந்தது என எனக்கு தெரியாது. இதுபற்றி இஸ்லாமிய சமூக உறுப்பினர்கள் சிலருடன் ஆலோசித்த போதுதான், அது 786 என்ற எண் என கூறினர்.

sheep-goes-for-1-crore

பக்ரீத்தையொட்டி இந்த செம்மறி ஆட்டை அதிக விலை கொடுத்து வாங்க சிலர் முன்வந்தனர். ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூட கொடுத்தும் வாங்குவதற்கு முன்வந்தனர். ஆனால் அதனை விற்க நான் தயாராக இல்லை.

ஏனென்றால் அந்த ஆடு என்னிடம் மிகவும் அன்பாக உள்ளது" என்று கூறினார். தற்போது அந்த ஆட்டிற்கு தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் கொடுத்து சிறப்பாக கவனித்து வருகின்றனர்.