மகளிருக்கு ரூ.1000 எப்போது? முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை
மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.1000 வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
யாருக்கெல்லாம் ரூ.1000
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் நடைமுறை படத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், சிறு தொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
முதலமைச்சர் இன்று ஆலோசனை
மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதித்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.