ரூ.1000 அனைத்து பெண்களுக்கும் கிடையாது - அரசு அறிவிப்பு என்ன சொல்கிறது?
பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்தார்.
மகளிர் உரிமை தொகை ரூ.1000 அறிவிப்பு
அப்போது முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.அதில் முக்கியமான குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த ஆயிரம் எப்போது வழங்கப்படும்? யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முதமிழறிஞர் கலைஞர் அவர்களின் நுாற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுகப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.
தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொரளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக இந்த வரவு - செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்று இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 என்று அறிவித்து விட்டு தற்போது தகுதி வாய்நதவர்களுக்கு என்று அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாருக்கு இந்த ரூ.1000 கிடைக்கும்?
பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வாங்க யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும்.
இவர்களுக்கு கிடைக்காது?
அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.