பெண்களுக்கு மாதம் ரூ.1000; இங்கு வாங்கிக்கொள்ளலாம் - அரசு அதிரடி

Tamil nadu
By Sumathi Jun 02, 2023 03:40 AM GMT
Report

மகளிருக்கு, 1000 ரூபாய் உரிமை தொகை ரேஷன் கடைகளில் பட்டுவாடா செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.

1000 ரூபாய்

தமிழகத்தில் மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், வரும் செப்., முதல் செயல்படுத்தப்பட உள்ளது. தகுதியான பயனாளிகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கு மாதம் ரூ.1000; இங்கு வாங்கிக்கொள்ளலாம் - அரசு அதிரடி | Rs 1000 Monthly Assistance Cm Launches

மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். அந்த கடனை தவணை வாரியாக செலுத்துகின்றனர். உரிமை தொகையை, வங்கி கணக்கில் செலுத்தினால், கடனுக்கான தவணையாக பிடித்தம் செய்து விட வாய்ப்புள்ளது.

அரசு முடிவு 

பல வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்ற குறைந்தபட்ச இருப்பை கட்டாயமாக்கி உள்ளன. மேலும், இந்த தொகையை, வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தினால், திட்டம் பிரபலம் அடையாது.

எனவே, மகளிர் உரிமை தொகையை, மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், ரேஷன் கடைகளில், மைக்ரோ ஏ.டி.எம்., கருவிகள் வாயிலாக பட்டுவாடா செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசணை அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.