இவ்வளவு வருமானம் இருந்தால் மட்டுமே மாதம் ரூ.1000 - தொடங்கி வைத்த முதலமைச்சர்

Madhya Pradesh
By Sumathi Mar 06, 2023 05:35 AM GMT
Report

பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 மாதம் 1,000 ரூபாய்

பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைப் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவரது 65வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இவ்வளவு வருமானம் இருந்தால் மட்டுமே மாதம் ரூ.1000 - தொடங்கி வைத்த முதலமைச்சர் | Rs 1000 Monthly Assistance Cm Launches

இந்த திட்டத்தின் கீழ், பெண்களின் சமூக- பொருளாதார நிலை உயரும். மாநிலத்தில் உள்ள 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைய உள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக பட்ஜெட் அறிக்கையில் இந்த திட்டத்திற்கு என ரூ. 8,000 கோடி ரூபாயை அம்மாநில அரசு ஒதுக்கியிருந்தது.

திட்டம் தொடக்கம்

இந்த திட்டத்தின் கீழ், கடந்த நிதிஆண்டில் ஆண்டு வருமான ரூ.2.5 லட்சம் மிகாமல் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வசதி கொண்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் வரும் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு மொத்த மக்கள் தொகையில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.6 கோடியாக உள்ளது.