SAY NO TO DMK; இது கோவில் நகரமா? கொலை நகரமா? ஆர்பி உதயகுமார் கடும் விமர்சனம்!

M K Stalin Tamil nadu ADMK DMK
By Swetha Jul 20, 2024 03:12 AM GMT
Report

இது கோவில் நகரமா ? கொலை நகரமா ? என ஆர்பி உதயகுமார் திமுக ஆட்சியை விமர்சித்துள்ளார்.

கொலை நகரமா ?

SAY NO TO DRUGS – SAY NO TO DMK என்ற தலைப்பில் திமுக ஆட்சி நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் குறித்தும், RESIGN STALIN என்ற தலைப்பில் திமுக ஆட்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயம் குறித்தும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

SAY NO TO DMK; இது கோவில் நகரமா? கொலை நகரமா? ஆர்பி உதயகுமார் கடும் விமர்சனம்! | Rp Udhayakumar Slams Dmk Govt And Stalin

அந்த வகையில், கருமத்தூரில் தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார் அப்போது அவர் பேசியது பின் வருமாறு, தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், கள்ளச்சாராயம் அருந்தி உயிர்பலி,

சட்ட ஒழுங்கு சீர்கேடு இவற்றை கண்டித்து ஸ்டாலினை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் மதுரையில் 11 படுகொலைகள் நடைபெற்றது. இதை என்னால் பட்டியலிட்டு சொல்ல முடியும்.

அண்ணாமலை போன்ற அரைவேக்காடு தலைவர்களால் பாஜகவுக்கு பின்னடைவு - ஆர்.பி.உதயகுமார்

அண்ணாமலை போன்ற அரைவேக்காடு தலைவர்களால் பாஜகவுக்கு பின்னடைவு - ஆர்.பி.உதயகுமார்

ஆர்பி உதயகுமார் 

தற்போது நடை பயிற்சி மேற்கொள்ளுவர்களுக்கு கூட உயிருக்கு உத்தரவாதம் இல்லை. தனியாக சொல்பவர்கள் மீது குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். பள்ளி மாணவர்கள் பணத்திற்காக கடத்தப்படுகிறார்கள். மதுரையில் நடைபெறும் சமூக விரோத செயலுக்கு இதுவரைக்கும் காவல்துறை துப்பு துலக்கவில்லை.

SAY NO TO DMK; இது கோவில் நகரமா? கொலை நகரமா? ஆர்பி உதயகுமார் கடும் விமர்சனம்! | Rp Udhayakumar Slams Dmk Govt And Stalin

கோயில் மாநகராக இருந்த மதுரை சமூக விரோதிகளின் கூ.டாரகமாக மாறிவிட்டது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சராக இருந்த பொழுது காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட விட்டார்கள்.

அதன் மூலம் தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு நிகராக இருந்தனர். இன்றைக்கு அதே காவல்துறை தலைகுனிந்து நிற்கிறது. இது போன்ற குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும்.தமிழகத்தில் கள்ளச்சாராயம் மரணங்கள் அதிகரித்து வருகிறது.

கடும் விமர்சனம்

இது குறித்து எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் விதி எண் 55 படி பேச முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து விதி எண் 56 படியும் பேச முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் கருத்துக்களை சட்டசபையில் பதிவு செய்ய விடாமல் ஜனநாயக படுகொலை செய்துள்ளார்கள்.

SAY NO TO DMK; இது கோவில் நகரமா? கொலை நகரமா? ஆர்பி உதயகுமார் கடும் விமர்சனம்! | Rp Udhayakumar Slams Dmk Govt And Stalin

இதை கண்டித்து தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தோம்.கடந்த ஆண்டு நடைபெற்ற உள்துறை மானிய கோரிக்கையில் எடப்பாடி இரண்டரை மணி நேரம் தமிழகத்தில் நடைபெறும் கள்ளசாரயம், போதை நடமாட்டம்,சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்து பேசினார்.

ஸ்டாலின் இதைக் கேட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் சாவு நடந்திருக்காது. ஸ்டாலின் கேட்கும் மனநிலையில் இல்லை. ஏனென்றால் 40 தொகுதியில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்ற மமதையில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.