அரசு மருத்துவமனை; ஆபரேஷன் தியேட்டரில் நர்சுக்கு பாலியல் தொல்லை - தீயாய் பரவும் வீடியோ!
மருத்துவர் ஒருவர் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாலியல் தொல்லை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அன்றாடம் பல நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், பரபரப்பான பணி நேரத்தில் மருத்துவர் ஒருவர் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
ஆர்எஸ்எஸ்சின் ஒரு பிரிவான ஏபிவிபி மாநில தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா பரபரப்புக்கு பெயர் போனவர்.. இவர் ஒரு அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார்.. இந்த அப்பார்ட்மென்ட்டில், வயதான பெண்ணின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தியிருந்தார் சுப்பையா என புகார் எழுந்தது.
அப்போது ஆதாரத்துடன் புகார் செய்யப்பட்டதால், சுப்பையா கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாமீனில் வெளியில் வந்தவர் மறுபடியும் டியூட்டியில் சேர்ந்தார்.. இப்போது மறுபடியும் அவர்மீது புகார் எழுந்துள்ளது.. அதுவும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் தியேட்டர்
இதுகுறித்து ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள் தரப்பில் சொல்லப்படுவதாவது: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. ஆபரேஷன் முடிந்து வெளியே வந்த டாக்டர் சுப்பையா சண்முகம்,
அறுவை சிகிச்சை அறையின் அருகே நர்ஸ்கள் டிரஸ் மாற்றும் ரூமுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அவருடன் ஆபரேஷனின்போது உதவி செய்த நர்ஸ் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். என தெரிவித்தார்.
இது தொடர்பாக, அரசு மருத்துவமனையில் இயக்குனர் ஆயிஷா கூறுகையில், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட டாக்டரிடம் விசாகா கமிட்டி விசாரித்து வருகிறது.
விசாரணை முடிந்த பின்னர் அந்த அறிக்கை மருத்துவ கல்லூரி இயக்குனருக்கும், தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.