ஓடஓட விரட்டி இளைஞர் கொடூரக் கொலை; கதறிய காதலி - பதறவைக்கும் சிசிடிவி!
காதலி கண்முன்னே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் வெட்டி கொலை
திருநெல்வேலி, வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா (30). இவர் இன்று தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகர் உள்ள பிரபல ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த கும்பல் அரிவாளால் ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை அவரது காதலி கண் முன்பே கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
6 தனிப்படைகள்
இதுகுறித்து தகவலறிந்து உடனே விரைந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை உள்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக ஜாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது.
மேலும் தீபக்ராஜா கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. மேலும், 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இது அரசியல் சார்ந்த கொலையா அல்லது சாதி ரீதியிலான கொலையா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.