சொத்துக்காக தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடூர மகன்..!
சொத்துக்காக தந்தை துண்டு துண்டாக வெட்டி காவேரிப்பாக்கத்தில் உள்ள நிலத்தில் புதைத்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் குமரேசன்(80), தனது தந்தையை காணவில்லை என்று அவரது மகன் காஞ்சனா நேற்று வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திய போது வீட்டிற்குள் ரத்த கரைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவரது உறவினர்களிடம் விசாரித்த போது அவரது மகன் குணசேகரன்(50), தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சொத்துக்காக தனது தந்தையை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பேரலில் போட்டு ராணிப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து,
வளசரவாக்கம் போலீசார் அவரது குமரேசன் உடல் புதைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த கொலை சொத்துக்காக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள மகன் குணசேகரனை தேடி வருகின்றனர் இந்த கொலையில் அவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
பெற்ற தந்தையை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி அவர்களுக்கு சொந்தமான இடத்தில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனது தந்தையை கொலை செய்து அவரது உடலை இங்கு புதைப்பதற்காக அவர் இந்த இடத்தை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.