நானும் ரவுடிதான் என அண்ணாமலை கத்துகின்றார் : அமைச்சர் நாசர் கிண்டல்
ஆவின் தொடர்பான தவறான கருத்துகளை தெரிவித்த அண்ணாமலை நானும் ரவுடி தான் என்பது போல அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறிவருவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
நானும் ரவுடிதான் அண்ணாமலை
கோவையில் ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் சா.மு.நாசர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அண்ணாமலை தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, நானும் ரவுடி தான் என்பது போல அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருவதாக கூறினார்.
மேலும் கடந்த பட்ஜெட்டின் போது தான் ஆவின் சுகாதார கலவை( ஹெல்த் மிக்ஸ்) தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது என்றும், அவ்வாறு இருக்க ஆவின் ஹெல்த் மிக்ஸ் கலவையை விட்டுவிட்டு , தனியாரிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ரூ. 77 கோடி வாங்கியதாக ஆதாரமற்ற மற்றும் பொய்யான தகவலை பரப்பினார்.
அண்ணாமலை மீது வழக்கு
இதற்காக அண்ணாமலை மீது கண்டிப்பாக வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவன காலிப்பணியிடங்களில் முறைகேடாக பணியமர்த்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை நிறுத்தி வைக்கப்பட்டன.
தற்போது அவற்றை நடைமுறைப்படுத்தி தவறுகள் ஏதும் நடைபெறாத வகையில் காலிப்பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம், அது காலத்தின் கட்டாயம் : முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்