சந்தையில் விற்கப்படும் மணமகன்கள்..இப்படிலாமா செய்வாங்க! எங்க தெரியுமா?

Marriage Bihar
By Sumathi Aug 11, 2022 11:29 AM GMT
Report

திருமண வயதில் உள்ள மணமகன்கள் அனைவரும் ஒரு சந்தையில் விற்கப்படும் நடைமுறை வெகு விமர்சையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

 700 வருட  சம்பவம்

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் தான் மணமகன்களை விற்கும் சந்தை ஒன்று நடத்தப்படுகிறது. சௌரத் சபா என அழைக்கப்படும் இந்த நிகழ்வு சுமார் 700 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சந்தையில் விற்கப்படும் மணமகன்கள்..இப்படிலாமா செய்வாங்க! எங்க தெரியுமா? | Rooms For Sale In Bihar Market

இந்த நிகழ்வில் பல மாவட்டங்களைச் சுற்றியுள்ள மைதில் பிராமணர்கள் கலந்து கொள்வார்கள். இந்தக் கலாசாரம், கர்னாட் வம்சத்தின்போது ராஜா ஹரி சிங் என்பவரால் தொடங்கப்பட்டது.

மணமகன் விற்பனை 

பல கோத்திரங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையே கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்தவும், வரதட்சணை இல்லாத வகையில் திருமணங்களை நடத்துவதற்கும் இந்தச் சந்தை தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 9 நாள்கள் நடைபெறும் இந்தச் சந்தையில், மணமகளின் தந்தை அல்லது சகோதரர் மணமகனைத் தேர்வு செய்வார்கள். பொருளாதாரம் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மணமகன்கள் வேட்டி மற்றும் குர்தா அல்லது ஜீன்ஸ் மற்றும் சட்டைகள் அணிந்து மரங்களுக்குக் கீழ் அமர்ந்திருப்பர்.

புனித நிகழ்வு

மணமகன்கள் தேர்வாகும் பட்சத்தில், அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து மணமகனை வாங்க வேண்டும். இருவருக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு சாட்சியாக மணமகன்கள் மீது சிவப்பு சால்வை போடப்படும்.

குறிப்பாக மணமகன்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு அவர்களின் பிறப்புச் சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ் அனைத்தும் பெண் வீட்டாரின் தரப்பில் இருந்து சரிபார்க்கப்படும். இந்தச் சந்தை அப்பகுதி மக்களிடையே புனிதமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.