அட நம்ம கிறிஸ்டியானோ ரொனால்டோ ரஜினிகாந்த் ஃபேன்-ஆ - ஷாக்கான ரசிகர்கள்!
கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரஜினிகாந்தின் ரசிகர் என்ற ந்தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2 வருட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். அது தற்பொழுது வெளியாகி வெற்றிநடை போட்டு பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. வெளியான ஏழு நாட்களில் ரூ.450 கோடி வசூலித்துள்ளது.
இந்த படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கேரளாவின் மெகாஸ்டார் மோகன்லால், 'செஞ்சுரி ஸ்டார்' சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் நடித்துள்ளனர். விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சுனில், மிர்னா மேனன், யோகி பாபு, தமன்னா பாட்டியா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் கலக்கியுள்ளனர்.
கால்பந்து வீரர்
இந்நிலையில், போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். இவர் தற்பொழுது தனது குடும்பத்துடன் சேர்ந்து ஜெயிலர் படத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
மேலும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் முன்பு நின்று போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரும் நம்ம தலைவர் ரஜினிகாந்த் ஃபேன் தான என்று கேட்டு வருகின்றனர். இது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.