பிரபல சீரியல் நடிகருக்கு உறுப்பு நீக்கம்; அருவருப்பா இருக்குனு சொன்னாங்க - கண்ணீர் மல்க வேண்டுகோள்!
சீரியல் நடிகர் சக்கரவர்த்தி சில விழிப்புணர்வு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சக்கரவர்த்தி
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்தவர் நடிகர் சக்கரவர்த்தி. இவருக்கு தமிழக அரசால் சமீபத்தில் இடை பாலினத்தவர் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், எதனால் தன்னுடைய என்னுடைய உடம்புக்குள் இப்படி மாற்றம் ஏற்படுகிறது என்பதை இன்டர்நெட்டில் சர்ச் செய்து தெரிந்து கொண்டேன். ஆனால் இதை நான் ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டிருந்தால் நானும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும்.
விழிப்புணர்வு
அதனால் யாரும் உடலில் சிறு பிரச்சனை என்றாலும் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடாதீர்கள் எனக்கு இப்போது ஆணுறுப்பு ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டிருக்கிறது. அதனால் பல இன்னல்கள் இருக்கிறது. ஆனாலும் 99% சக்சஸ் ஆகிவிட்டது. இன்னும் இருக்கும் நாட்களையும் நல்லபடியாக வாழ்ந்து விட்டு போய்விட வேண்டும் என்று நினைக்கிறேன்.
அதே நேரத்தில் என்னைப்போல பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. என்னுடைய தலை முடி, தாடி, மீசை எல்லாம் உதிர்ந்து போய்விட்டது. அப்போது நான் வேலை பார்த்த டிவி சேனலில் உன்னை இந்த மாதிரி பார்க்க அருவருப்பாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள்.
பிறகு நான் டாக்டரிடம் இதைச் சொல்லி இன்ஜெக்ஷன் போட்டு என்னுடைய தாடி மீசையை மீண்டும் வளர வைத்தேன். ஆனால் அதுவும் பெரிய அளவில் நாட்கள் இருக்காது என்று கூறியிருக்கிறார். எப்படியோ இருக்கிற நாளை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவருக்கு ஆணுறுப்பின் வழியாகவே சிறுநீர், மாதவிடாய் மற்றும் விந்து வெளியேறியுள்ளது. அதனால் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு கர்ப்பபையை ஆபரேஷன் செய்து எடுத்துள்ளனர். தொடர்ந்து, புற்றுநோய் பாதிப்பு வந்து விடக்கூடாது என்று ஆணுறுப்பை ஆப்ரேஷன் செய்து அகற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video