ஹீரோயினாக களமிறங்கும் நடிகை ரோஜாவின் மகள்? ப்பா... இப்படி வளந்துட்டாங்களா!
நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூமாலிகா நடிகையாக களமிறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்ஷூமாலிகா
அன்ஷூமாலிகா தற்போது, அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஆகியவை பற்றி படித்து வருவதாகவும், படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின்னர் நடிப்பில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.
நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூமாலிகாவை நடிக்க வைக்க டோலிவுட் இயக்குனர்கள் சிலர், அனுகியதாகவும், அதற்கு ரோஜா - செல்வமணி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகையாக?
அன்ஷுமாலிகா எழுதிய 'தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்', என்கிற புத்தகம் 'ஜி டவுன் என்ற இதழில் வெளியானது. இந்த புத்தகத்திற்காக சமீபத்தில் தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை இவர் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் திரையுலகில் களமிறங்கினால் சிறந்த நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து, ரோஜா - செல்வமணி தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.