மக்கள் செருப்பால அடிப்பாங்க..!! திருத்தணி கோவிலில் ஆவேசமான ரோஜா..!!

Roja Tamil nadu Andhra Pradesh YS Jagan Mohan Reddy
By Karthick Nov 13, 2023 12:00 PM GMT
Report

நடிகை ரோஜா வரும் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவேண்டும் என திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ரோஜா சாமி தரிசனம்

நாளை முதல் கந்தசஷ்டி விரதம் துவங்கும் நிலையில், வரும் சனிக்கிழமையன்று சூரசம்ஹரம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் அமைச்சரும் நடிகையுமான ரோஜா, திருத்தணி முருகன் கோவிலில் கணவர் ஆர்.கே.செல்வமணியுடன் சாமி தரிசனம் செய்தார்.

roja-angry-comments-about-chandrababu-naidu

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரோஜா பேசும் போது, மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆந்திர மாநிலத்திற்கு நல்லது செய்பவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாகவும், யாருடணும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட போவதில்லை என்று தெரிவித்தார்.

இது வெறும் ட்ரைலர் தான்...ரோஜாவின் மொத்த ஆபாச படமும் வரும்..மீண்டும் மிரட்டும் எதிர்க்கட்சி

இது வெறும் ட்ரைலர் தான்...ரோஜாவின் மொத்த ஆபாச படமும் வரும்..மீண்டும் மிரட்டும் எதிர்க்கட்சி

ஜாமீனில் வெளிவந்துள்ள ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக ஜாமீனில் வந்திருப்பதாக குறிப்பிட்ட ரோஜா, அவர் மீண்டும் 21ஆம் தேதிக்குள் சிறைக்கு செல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

roja-angry-comments-about-chandrababu-naidu

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நேசிக்கும் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி இருப்பதால் தவறு செய்தவர்களுக்கும் ஊழல் செய்பவர்களுக்கும் கஷ்டமாக தான் இருக்கும் என்ற ரோஜா, சினிமா துறையில் இருந்து தான் அரசியலுக்கு வந்திருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்து தான் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.

roja-angry-comments-about-chandrababu-naidu

தன்னை எதிர்க்க முடியாமலும் தன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தான், ஒரு பெண் என்றும் பார்க்காமல் தன் கேரக்டரை பற்றி சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டிய ரோஜா, தனி நபர் விமர்சனத்தை எந்த ஆணும் பெண்ணும் ஏற்க மாட்டார்கள் என்று கூறி செருப்பால் தான் அடிப்பார்கள் என்று கடுமையாக சாடினார்.