இது வெறும் ட்ரைலர் தான்...ரோஜாவின் மொத்த ஆபாச படமும் வரும்..மீண்டும் மிரட்டும் எதிர்க்கட்சி

Roja India Andhra Pradesh YS Jagan Mohan Reddy
By Karthick Oct 05, 2023 07:29 AM GMT
Report

ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சரும் நடிகையுமான ரோஜாவின் நிர்வாணப் படத்தை முழுமையாக வெளியிடுவோம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் மகளிரணி தலைவர் அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் ரோஜா

பிரபல திரைப்பட நடிகையாக இருந்து தற்போது, ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ஒய்.எஸ்.ஆர் கட்சியில் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர் ரோஜா. ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு கைதானதை தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் பெரும் மோதல் போக்கு நிலவி வருகின்றது.

roja-full-blue-film-will-be-released-soon

இந்நிலையில், நடிகை ரோஜா மீது தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அவதூறு பரப்பும் விதமாக பேசியுள்ளார். நடிகை ரோஜா ஆபாசப் படத்தில் நடித்ததாக சர்ச்சைக்குரிய வகையில் சத்திய நாராயண மூர்த்தி பேசியிருந்தார். இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கண்ணீர் மல்க பேசிய ரோஜா பேசியதை தொடர்ந்து பண்டாரு சத்தியநாராயணா கைது செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் முழு படமும் வரும்

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி மகளிர் அணி தலைவர் வாங்கலபுடி அனிதா ரோஜாவைக் கடுமையாக குற்றம்சாட்டினார். ரோஜா சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் மருமகள் பிராமணியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டிய அவர், அப்போது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வினவி, அமைச்சர்கள் மட்டும்தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா?" என கேட்டார்.

roja-full-blue-film-will-be-released-soon

சட்டப்பேரவையில் ரோஜா பேசியதை எல்லாம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்று கூறி, ரோஜாவை யாரும் பெண் என்று கருதவில்லை என்றும் அவரை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள்கூட வெறுக்கிறார்கள்" என தெரிவித்தார். பெண்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக ரோஜா தற்போது அழுகிறார் என குற்றம் சாட்டி, நான்கரை ஆண்டுகாலமாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் அனைவருமே கதறி அழுதுகொண்டிருக்கிறார்கள் என்று கூறி, இப்போது ரோஜா நடித்த படத்தின் டிரெய்லர் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் வருங்காலத்தில் ஒரிஜினல் படத்தைக் வெளியிடுவோம்" என மீண்டும் எச்சரிக்கை செய்துள்ளார்.