மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் சந்திரபாபு நாயுடு - நடிகை ரோஜா பரபரப்பு குற்றசாட்டு!
திருப்பதி லட்டு தொடர்பான நாடகத்தை நடத்துகிறார் சந்திரபாபு நாயுடு என ரோஜா கூறியுள்ளார்.
நடிகை ரோஜா
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா சாமி தரிசனம் மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார்.
ஆந்திராவில் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் மக்களுக்காக அவர் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை. மார்ச் உடன் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலம் முடிந்துள்ளது. ஜூலை மாதத்தில் திருப்பதி கோயிலுக்கு நெய் வந்தது.
அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது, 4 லாரி நெய் வனஸ்பதி கலந்ததால் நிராகரிக்கப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரபாபு நாயுடு
ஜெகன்மோகன் ரெட்டியை பூஜ்ஜியம் ஆக்க வேண்டும் என திட்டமிட்டு சந்திரபாபு நாயுடு நாடகம் நடத்தி வருகிறார். முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை அவர் தெரிவித்துள்ளார். மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்.
திருப்பதி லட்டில் எந்தவொரு கலப்படமும் இல்லை. தன்னுடைய மலிவான அரசியலுக்காகக் கடவுளை ரோட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். லட்டு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
சந்திரபாபு நாயுடு முடிந்தால் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும், இல்லையெனில் ராஜினாமா செய்ய வேண்டும். என கூறியுள்ளார்.