கோலி, ரோஹித்துக்கு ஆப்பு வைத்த கம்பீர் - ஒருவருக்கு மட்டுமே ஓய்வு!

Rohit Sharma Virat Kohli Indian Cricket Team Gautam Gambhir
By Sumathi Aug 12, 2024 09:30 AM GMT
Report

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பல ஆண்டுகளுக்கு முன்பே உள்ளூர் போட்டிகளில் ஆடுவதை நிறுத்திவிட்டனர்.

துலீப் கோப்பை

வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக, ஒரு மாதம் இந்திய அணியினர் எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாட செல்வதில்லை.

கோலி, ரோஹித்துக்கு ஆப்பு வைத்த கம்பீர் - ஒருவருக்கு மட்டுமே ஓய்வு! | Rohit Virat Kohli To Play In Duleep Trophy

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள 2024 துலீப் கோப்பை டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களை விளையாட வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையெல்லாம் பதக்கம்னு தந்து ஏமாத்துறாங்க - ஒலிம்பிக் குறித்து சர்ச்சையை கிளப்பிய அமெரிக்க வீரர்!

இதையெல்லாம் பதக்கம்னு தந்து ஏமாத்துறாங்க - ஒலிம்பிக் குறித்து சர்ச்சையை கிளப்பிய அமெரிக்க வீரர்!

9 ஆண்டுகள் கழித்து..  

ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக இருந்தபோது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு கூறியதில்லை. தற்போது, இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் விளையாட வேண்டும் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

virat - rohit sharma

6 போட்டிகளைக் கொண்ட துலீப் கோப்பை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்க உள்ளது. இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய 4 அணிகள் அந்தத் தொடரில் விளையாட உள்ளன.

அந்த 4 அணிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, கே.எல் ராகுல், அக்சர் படேல், சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ் போன்ற பெரும்பாலான நட்சத்திர இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர். ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மட்டுமே அந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.