வலுக்கும் கோரிக்கை - 5-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் கேப்டன் இல்லையா..?
இந்தியா அணியின் 5-வது டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக மற்றொரு வீரர் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ரோகித் சர்மா
இந்தியா அணி கேப்டனாக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒரு நாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் தோல்வியை தழுவினாலும், இந்திய அணிக்கு அடுத்து எதிர்கொள்ளவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான கேப்டனாக ரோகித் சர்மா தான் நீடிக்கிறார்.
இந்தியா அணியின் நிர்வாகம் அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையிலும், அவ்வப்போது அணிக்குள் சற்று விரிசல் இருப்பதாக கூறப்படுகிறது. ஹர்டிக் பாண்டியாவின் பெயர் தான் அடுத்து அணிக்கான கேப்டன் பதவியில் அதிகமாக அடிபடும் நிலையில்,
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில், ரோகித் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படவுள்ளார் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
5-வது டெஸ்ட்
பேட்டி ஒன்றில் இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், 5ஆவது டெஸ்ட் போட்டியில் 100ஆவது டெஸ்டில் விளையாடும், அஸ்வினுக்கு கேப்டன் பதவியை கொடுத்து, கௌரவிக்க வேண்டும் என்றார்.
ஆனால், சுனில் கவாஸ்கரின் கருத்திற்கு பதிலளித்த அஸ்வின், கவாஸ்கர் என்மீது வைத்திருக்கும் அன்பு நன்றிகள் என்ற குறிப்பிட்டு,. இந்திய அணிக்காக ஆடும்போது, அனைத்து நொடிகளையும் என்ஜாய் செய்துதான் விளையாடுகிறேன் என்றும் அதுவே போதும்'' எனத்தெரிவித்தார்.