மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகும் ரோகித் சர்மா? ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு ரோகித் சர்மா வெளியேறுவார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் தலா 5 கோப்பைகளை வென்றிருந்தாலும்,
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி இதுவரை ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் தோல்வியடையாமல் கோப்பையை வென்றுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில், ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அப்போதே இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தையே பிடித்தது. இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இதுகுறித்து பேசுகையில்,
ரோகித் சர்மா விலகல்
ரோகித் சர்மா வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடமாட்டார் என கருதுகிறேன். ட்ரேட் மூலம் வேறு அணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. அப்படி இல்லாதபட்சத்தில் அவர் ஏலத்திற்கு வருவார். ஒரு வீரரை அந்த அணி தக்கவைக்கிறது என்றால்,
நிச்சயம் அவர் 3 ஆண்டுகளுக்கு அதே அணியில் விளையாடுவார் என உங்களால் கூறமுடியாது. நீங்கள் எம்.எஸ்.தோனியாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். சென்னை அணிக்கும், எம்.எஸ்.தோனிக்கும் உள்ள உறவு வேறானது.
அதுவே மும்பை இந்தியன்ஸ்க்கும் ரோகித் சர்மாவிற்கும் உள்ள உறவு வேறானது. நிச்சயம் மும்பை அணி ரோகித் சர்மாவை வெளியேற்றும் அல்லது அவர் மும்பை அணியை விட்டு வெளியேறுவார் எனத் தெரிவித்துள்ளார்.