வணக்கம் சொல்லி தமிழில் பேசிய ரோஹித் சர்மா..உற்சாகமடைந்த தமிழ் ரசிகர்கள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்ளும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் புதன்கிழமை சென்னை வந்தடைந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஏப்ரல் 9-ம் தேதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி புதன்கிழமை சென்னை வந்தடைந்தது. இதையொட்டி மும்பை இந்தியன்ஸ் அணி சுட்டுரைப் பக்கத்தில் காணொளியை பதிவிட்டுள்ளது. அதில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா "வணக்கம் சென்னை, மும்பை இந்தியன்ஸ் இங்கே வந்துட்டோம்" என்று தமிழில் பேசுகிறார்.
Chenn-hi ?#OneFamily has arrived ?#MumbaiIndians #IPL2021 @ImRo45 pic.twitter.com/6Yu0EvXP2k
— Mumbai Indians (@mipaltan) March 31, 2021
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil
தலதா மாளிகை குண்டுவெடிப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பில்லை - மகாநாயக்க தேரரிடம் வாங்கி கட்டிய எதிர்கட்சி எம்பிக்கள் IBC Tamil