ஒரே மாதிரிதான் பந்து போடுவியா; இதுக்கூட தெரியாதா - ஷர்துல் தாக்கூரை விளாசிய ரோஹித்!
ஷர்துல் தாக்கூரை, ரோஹித் ஷர்மா கடுமையாக திட்டும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
ind vs nz
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (101) மற்றும் சுப்மன் கில் (112) என இருவருமே சதம் அடித்தனர்.
ஆனால் அவர்களை தவிர்த்து ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது இந்நிலையில் ஷர்துலின் பந்துவீச்சுக்கு பின்னால் ரோஹித் சர்மாவின் கடுமையாக கோபம் இருந்துள்ளது.
விளாசிய ரோஹித்
2 விக்கெட்களால் உற்சாகமான அவர், அடுத்த 2 பந்துகளையும் தொடர்ச்சியாக பவுன்சர்களாக வீசினார். இதனை நன்கு அறிந்திருந்த டெவோன் கான்வே சுலபமாக பவுண்டரிகளை அடித்து தள்ளினார்.
இதனால் கடுப்பான ரோகித் சர்மா, ஒரே மாதிரி பந்தையா போடுவியா? இதுக்கூடவா தெரியாது, 2 பவுண்டரிகள் சென்றுவிட்டது என மிகவும் கோபமாக மைதானத்திலேயே கத்தினார். இதுகுறித்த வீடியோ பரவி வருகிறது.