களத்தில் காயத்துடன் போராடிய ரோகித் ஷர்மா... - நெகிழ்ந்து பாராட்டும் ரசிகர்கள்...!

Rohit Sharma Cricket Indian Cricket Team
By Nandhini Dec 08, 2022 05:45 AM GMT
Report

களத்தில் காயத்துடன் இந்திய அணியின் வெற்றிக்கு போராடிய ரோகித் ஷர்மாவின் செயலை அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்து பாராட்டி வருகின்றனர்.

இந்தியாவை வீழ்த்திய வங்காளதேசம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா - வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியின் முடிவில், 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து, இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபாரமாக வெற்றி பெற்றது. 

ரோஹித் ஷர்மா காயம்

நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வங்காளதேசமும், இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடியது.

இப்போட்டியின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில், முகமது சிராஜ் வீசிய 2வது ஓவரை அனமுல் ஹக் எதிர்கொண்டார். அப்போது பந்து அவருடைய பேட்டில் பட்டு எட்ஜ்ஜானது.

அது இரண்டாவது ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ரோஹித் சர்மாவை நோக்கிச் சென்றது. அதனை கேட்ச் எடுக்க ரோஹித் முயற்சி செய்த போது, பந்து அவரது கையில் பட்டு நழுவியது. இதனால் ரோஹித் பலத்த காயம் ஏற்பட்டு கைகளை உதறியபடி அங்கிருந்து வெளியேறினார்.

cricket-indian-team-rohit-sharma

களத்தில் போராடிய ரோஹித் சர்மா

இதைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய இந்திய இலக்கை நோக்கி விளையாடியது. இப்போட்டியில் ஆரம்பத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக ரன் சேர்த்த போதும் கடைசி கட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டது.

காயம் காரணமாக ரோஹித் ஷர்மா, கடைசியில் பேட்டிங் செய்ய வந்தார். கையில் காயம் ஏற்பட்டபோதிலும், வலியைத் தாங்கிக்கொண்டு ரோஹித் சர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார்.

ஆனாலும், இந்திய அணிக்கு கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரோகித் சர்மா சிக்சர் எடுத்தார். அடுத்த பந்தில் அவரால் ரன் அடிக்க முடியாமல் போனது. இதனையடுத்து, 2 ஒரு நாள் போட்டிகளையும் வங்காளதேச அணி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

குவியும் வாழ்த்து

இந்நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் செயலை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

தொடக்க வீரராக கூட அவர் களமிறங்கவில்லை. அப்படி இருந்த போதும் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் செய்ய வந்த ரோஹித், போட்டியை மிகவும் சிறப்பாக கொண்டு சென்றார். களத்தில் நின்று போராடிய ரோகித் சர்மாவை அவரது ரசிகர்கள் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.