ஒரே சிக்ஸ்...உலகில் யாரும் செய்யாத சாதனையை அசால்ட்டாக செய்த ரோகித்!!

Rohit Sharma Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2024
By Karthick Jun 10, 2024 05:23 AM GMT
Report

நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்தியா வெற்றி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில் நடைபெற்றது. டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி இந்தியா அணிக்கு நெருக்கடியையே கொடுத்தனர்.

Virat Rohit Sharma batting against Paksitan

தொடர்ந்து சீரான இடைவேளையில் விக்கெட் இழந்து வெளியேறினர் இந்தியா வீரர்கள். ரோகித் 13, விராட் 4, பண்ட் 42, அக்சர் படேல் 20, சூர்யகுமார் யாதவ் 7,துபே 3, பாண்டியா 7, ஜடேஜா 0, அர்ஷிதீப் சிங் 9, பும்ரா 0 என வரிசையாக வருவதும் போவதுமாக இருந்தனர் இந்திய வீரர்கள்.

இன்று இந்தியா - பாகிஸ்தான்!! கடைசி நேரத்தில் கழண்ட முக்கிய வீரர்...தவிக்கும் அணி

இன்று இந்தியா - பாகிஸ்தான்!! கடைசி நேரத்தில் கழண்ட முக்கிய வீரர்...தவிக்கும் அணி

சாதனை

வெறும் 119 ரன்களை மட்டுமே இந்தியா அணி எடுத்து ஆல் அவுட்டானது. பின்னர் எளிதான இலக்கை நோக்கி களம்கணட பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் 14 ஓவர்களில் 80 ரன்களை எடுத்து வெற்றி பெரும் முனைப்பில் இருந்தது.

Bumrah against Pakistan

கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா, பாண்டியா பந்துவீச்சில் பாகிஸ்தானை சோதித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்கள். முடிவில் 20 ஓவர்களில் பாகிஸ்தான் 113/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களே எடுத்தாலும் அவர் ஒரு சிக்ஸ் அடித்திருந்தார்.

Rohit Sharma batting against Paksitan

இந்த சிக்ஸ் மூலம் அவர் மிக பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஷஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் ஓவரில் சிக்ஸ் அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற அரிய சாதனையை செய்தார் ரோகித் சர்மா.