ரோஹித் பதவி பறிப்பு; பும்ராவும் இல்லை - கம்பீர் அதிரடி முடிவால் பெரிய ட்விஸ்ட்!
கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
5வது டெஸ்ட்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 ஆம் தேதி முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிட்னி டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவார? என கேட்கையில், அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை.
கம்பீர் முடிவு
டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஒரு அணியின் கேப்டன் தான் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் சிட்னியில் நடக்கும் 5வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கவுதம் கம்பீர் சந்தித்தார்.
இதனால் கேப்டன் ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் என தெரிகிறது. ஆஸ்திரேலிய அணி, அடுத்த மூன்று டெஸ்ட்களில் ஒரு வெற்றியைப் பெற்றாலே பைனலுக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.