சம்பவம் செய்த ஆஸி; ஜெயிக்கவே ஆடினோம்.. ஆனால் அதுதான் சரியில்லை - ரோஹித் ஆதங்கம்!
இந்தியா தோல்வி குறித்து ரோஹித் சர்மா பேட்டியளித்துள்ளார்.
இந்தியா தோல்வி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இதனால் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் வாய்ப்பு குறைந்துள்ளது. இந்நிலையில் இந்த மோசமான தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில்,
ரோஹித் பேட்டி
இந்த தோல்வி எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த தோல்விக்கு ஒரேயொரு காரணம் என்று எதுவும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் எங்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக நினைக்கிறேன்.
நிதிஷ் குமார் ரெட்டி முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறார். இங்கு பிட்ச் மோசமாக இருந்தும், சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினார். பும்ராவை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே அவரை பார்த்து வருகிறோம்.
ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலியா வந்து, அவரின் பணியை சிறப்பாக செய்கிறார். அவருக்கு மற்ற பவுலர்களிடம் இருந்து போதுமான உதவி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.