அஸ்வினை தொடர்ந்து ரோஹித் சார்மா.. கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு? வெளியான தகவல்!

Rohit Sharma Cricket Indian Cricket Team Sports
By Vidhya Senthil Dec 28, 2024 04:20 PM GMT
Report

அஸ்வினை தொடர்ந்து ரோஹித் சர்மாவும் டெஸ்ட் கிரிக்டெ்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோஹித் சர்மா

பார்டர்-கவாஸ்கர் டிராபி என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே விளையாடப்படும் ஒரு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் கோப்பை ஆகும்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

ஓய்வு பெறும் ரோஹித் சார்மா

இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பின்னர் பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

ஜெய்ஸ்வாலை கோபத்தில் திட்டிய ரோஹித் சர்மா.. அந்த வார்த்தையை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

ஜெய்ஸ்வாலை கோபத்தில் திட்டிய ரோஹித் சர்மா.. அந்த வார்த்தையை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 3 பார்டர்-கவாஸ்கர் தொடரில் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

 ஓய்வு?

இதுவரை நடந்த டெஸ்ட் போட்டியில் ஓபனிங் இறங்கும் ரோஹித் பின் வரிசையில் இறங்கிச் சொதப்பினார்.மேலும், ஆகாஷ்தீப் ஜஸ்பிரித் பும்ரா கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், அஸ்வினை தொடந்து ரோஹித் சர்மாவும் டெஸ்ட் கிரிக்டெ்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஓய்வு பெறும் ரோஹித் சார்மா

ஒரு வேளை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தோல்வியடைந்தால், ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.