ரோகித் சர்மாவுக்கு திடீர் காயம் - அரையிறுதியில் விளையாடமாட்டாரா?

Rohit Sharma Cricket Indian Cricket Team T20 World Cup 2022
By Sumathi Nov 08, 2022 07:47 AM GMT
Report

ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் டி20 அரையிறுதியில் விளையாடுவாரா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

காயம்

நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கப்போகும் அரையிறுதி போட்டியில் இந்திய அணியானது இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இதனிடையில், அடிலெய்டில் இந்திய வீரர்கள் அங்கு இந்த அரையிறுதி போட்டிக்காக தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

ரோகித் சர்மாவுக்கு திடீர் காயம் - அரையிறுதியில் விளையாடமாட்டாரா? | Rohit Sharma Net Session After Forearm Injury

அப்போது, மைதானத்தில் வலைப் பயிற்சி மேற்கொண்டு இருந்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா வலைப் பயிற்சியின்போது த்ரோ டவுன் ஸ்பெசலிஸ்ட் ரகு வீசிய பந்தில் முழங்கையில் காயம் ஏற்பட்டது.

இதனால், வலைப்பயிற்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ரோகித் சர்மா அரையிறுதி போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகின.

 மீண்டார்

இந்நிலையில், தற்போது அந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரோகித் சர்மா மீண்டும் ஐஸ் பேக் உதவியுடன் ஒத்தடம் வைக்கப்பட்டு பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார். இதன் காரணமாக நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவார் என்று உறுதியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ரோகித் சர்மாவுக்கு திடீர் காயம் - அரையிறுதியில் விளையாடமாட்டாரா? | Rohit Sharma Net Session After Forearm Injury

 சொதப்பல்

இந்திய அணியில் ரோகித் சர்மா பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே அரை சதத்தை கடந்தார் மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

இதனால், பல விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் அவர் கட்டாயம் இங்கிலாந்து அணியுடன் விளையாடியே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. அதற்காகவே தீவிர பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.