பரவாயில்லை... இந்த கவலை நீண்டகால கவலை கிடையாது - ரோகித் சர்மா
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கையுடனான தோல்வி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இரு பிரிவுகளாக 6 அணிகள்
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவை வீழ்த்திய இலங்கை
நேற்று ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - இலங்கை அணிகள் மோதிக் கொண்டன. இலங்கை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் தோல்வியையடுத்து, ஆசியகோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணி இழந்துவிட்டது.
ரோகித் சர்மா பேட்டி
இந்நிலையில், இலங்கையுடனான தோல்வி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களிடம் பதில் அளித்து பேசுகையில், பரவாயில்லை... தொடர்ந்து 2 போட்டியில் தான் தோல்வி அடைந்திருக்கிறோம். இந்த கவலை நீண்டகால கவலை கிடையாது.
கடைசி உலகக்கோப்பை முதல் தற்போதுவரை நாங்கள் நிறைய போட்டிகளில் தோல்வி அடையவே இல்லை. இப்போட்டிகள் எங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும். ஆசிய கோப்பையின் போது எங்களை அழுத்தத்திற்குள்ளாக நாங்கள் விரும்பினோம்.
அதற்கான பதில்களை தேடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் ஆட்டத்தின் முதல் பாதியை நாங்கள் சரிவர பயன்படுத்திருக்கலாம். ஆனால், 2-வது பாதி சரியாக செல்லவில்லை என்றார்.