Match Fixing சர்ச்சையில் சிக்கிய ரோகித் சர்மா..? பாயுமா பி.சி.சி.ஐ நடவடிக்கை - அதிர்ச்சி பின்னணி

Rohit Sharma Indian Cricket Team Mumbai Ranji Trophy
By Karthick Mar 14, 2024 06:32 AM GMT
Report

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஞ்சி டிராபி

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன. மும்பையில் நடைபெற்று வரும் இந்த போட்டியை காண, இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நேரில் சென்றனர்.

rohit-sharma-in-match-fixing-case-in-ranji-final

இவர்களை போல, இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவும் போட்டியை காண சென்றார். ஆனால் அவர் பார்வையாளர்கள் அரங்கில் அமராமல் மும்பை மாநில அணி வீரர்கள் அறையில் அமர்ந்திருந்த போது, மும்பை அணியின் கேப்டன் ரஹானேவுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

rohit-sharma-in-match-fixing-case-in-ranji-final

இது தொடர்பாக பிசிசிஐ பகிர்ந்த வீடியோவில், ரோகித் சர்மா தொலைபேசியையும் பயன்படுத்தி கொண்டிருந்தார். பிசிசிஐ விதிப்படி வீரர்கள் அறைக்குள் தொலைபேசி உட்பட எந்த வித நவீன தொலைதொடர்பு கருவிகள் செல்லக் கூடாது என்றும் வீரர்கள் யாரும் அதை பயன்படுத்தக் கூடாது என்றும் சட்டம் உள்ளது.

தோனியின் முடிவு ...சென்னை அணியின் அடுத்த கேப்டன்..?காசி விஸ்வநாதன் பரபரப்பு பேட்டி

தோனியின் முடிவு ...சென்னை அணியின் அடுத்த கேப்டன்..?காசி விஸ்வநாதன் பரபரப்பு பேட்டி

Match Fixing சர்ச்சை

அத்துடன் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்பட்ட லாப்டாப் உள்ளிட்ட சில எலக்ட்ரானிக் பொருட்களை தவிர வேறு எந்த கருவிகளையும் எடுத்துச் செல்லக் கூடாது என்ற சட்டமும் நிலவி வருகிறது. விதி மேட்ச் ஃபிக்ஸிங்கை தடுக்க கொண்டு வரப்பட்டது.

rohit-sharma-in-match-fixing-case-in-ranji-final

ஆனால், கையில் தொலைபேசியுடன் ரோகித் சர்மா வீரர்கள் அறைக்குள் அமர்ந்திருந்தது ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற போதே பயன்படுத்தியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால், மேட்ச் ஃபிக்ஸிங் கீழ் தான் நடவடிக்கை எடுக்கப்படும்.